MGR In Japan

Happy and Prosperous New Year to all MGR Devotees, MGR Fans and our Blog readers.

MGR Visiree Abul Hassan has sent this article to me which was featured in Ananda Vikatan in 1970.

செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி; சனிக்கிழமை இரவு மணி பத்து.

டோக்கியோ நகர ஹனீதா விமான நிலையத்தில், தமிழர்களின் சிறு கூட்டம் ஒன்று காணப்பட்டது. கூடவே, ‘கிமோனோ’ அணிந்த ஜப்பானிய பெண்கள்! எல்லோர் முகத்திலும் புன்னகை; கையில் பூமாலை.

”’ஏர் ஃபிரான்ஸ்’ விமானம் இன்னும் சிறிது நேரத்தில் வரப்போகிறது. இதோ, வந்துவிட்டது. பிரயாணிகள் இறங்கிவிட்டார்கள். பஸ்ஸில் ஏறிவிட்டார் கள். இமிக்ரேஷன் பகுதிக்கு வந்தாகிவிட்டது. கஸ்டம்ஸ் பகுதியைக் கடந்துவிட்டார் கள்…”- டோக்கியோ விமான நிலைய நுழைவாயிலில் உள்ள ஒரு போர்டு இந்தத் தகவல் களைச் சொல்லிக்கொண்டு இருந்தது.

”அதோ, வேஷ்டியும் ஜிப்பாவும் அணிந்து தலையில் குல்லாயுடனும் முகத்தில் புன்னகையுடனும் வரு கிறாரே… அவர்தான் எம்.ஜி.ஆரா? மிகவும் ஸிம்பிளாக இருக்கிறாரே?” – ஜப்பானிய பெண்களின் வியப்புக் கேள்வி.

”அவரேதான்! லட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயத்தைக் கொள்ளை கொண்ட புன்னகை அது!” – ஜப்பானில் வாழும் தமிழர்களின் பதில்.

இரவு மணி ஒன்று.

டோக்கியோ. பிரபல இம்பீரியல் ஹோட் டலில் எம்.ஜி.ஆர் குழு இறங்கியது.

டோக்கியோ வாழ் தமிழரான மிஸ்டர் சந்தானம் எல்லோரையும் அழைத்துக்கொண்டு போய், தம் வீட்டில் சுடச்சுட ரசம் சாதமும் அப்பளமும் பரிமாறினார்.

தனக்கென்று அதிக வசதிகள் உள்ள அறையையோ, சௌகரியங்களையோ தேடிக்கொள்ள விரும்ப வில்லை எம்.ஜி.ஆர். மேக்கப் செய்யும் முத்து எங்கே இருந்தாரோ… தம்முடைய உதவியா ளர் எங்கே இருந்தாரோ அங்கேயேதான் அவரும் இருந்தார். வாழைப்பழம் சாப்பிடுவது என்றால் கூட, குழுவிலிருந்த 12 பேருக்கும் கிடைத்தால்தான் அவரும் சாப்பிடுவார். எல்லாவற்றிலும் அப்படி ஒரு சமத்துவம்!

அன்று ஞாயிற்றுக் கிழமை. ‘எக்ஸ்போ’ கண்காட்சியில் கூட்டம் நிறைந்து விட்டது. ”எட்டு லட்சம் பேர் உள்ளே போய்விட்டார் கள். இனிமேல் உள்ளே வர இடம் இல்லை” என்று எலெக்ட்ரானிக் இயந்திரம் அறிவித்துவிட்டது. முக்கியமான ‘கேட்’டுகள் எல்லாம் மூடிக்கொண்டுவிட்டன.

உள்ளே எப்படியாவது போகவேண்டும் என்ற துடிப்பு எம்.ஜி.ஆருக்கு. ஆனால், காவல்காரன் உள்ளே விட சம்மதித்தால்தானே? ஒரு கணம் யோசித்தேன். நேராகக் காவல் நிலைய அதிகாரி ஒருவரை அணுகி, ”இந்தோகா தகஹாஷி ஹிதேகி!” என்றேன். அவர் கண்கள் ஆவலில் மினுமினுத்தன. வியப்போடும் பணிவோடும், அருகில் இருந்த சிறிய கேட் ஒன்றின் வழியே ஸ்பெஷலாக எம்.ஜி.ஆரை உள்ளே அனுப்பி வைத்தார்.

‘தகஹாஷி ஹிதேகி’ என்பவர் ஜப்பானில் புகழ்பெற்ற, எல்லோரும் விரும்புகிற திரைப் பட நடிகர். ‘இந்தியாவின் தகஹாஷி ஹிதேகி’ என்று எம்.ஜி.ஆரை அறிமுகப்படுத்தியதும், அந்த அதிகாரியின் வியப்புக்கும் பணிவுக்கும் கேட்பானேன்?

எக்ஸ்போ கண்காட்சியில் உயரமான கூண்டு ஒன்றின் அருகே ‘ஷூட்டிங்’ நடந்துகொண்டிருந்தது. ஒரு தமிழர் அங்கே வந்து சேர்ந்தார். தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகள், சென்னைச் செய்திகள் எல்லாவற் றையும் சொல்லிவிட்டுக் கடைசி யில், ”ரொம்பப் பணக் கஷ்டம். நீங்கள் ஏதாவது உதவி செய்தால் தேவலை” என்றார்.

உடனே, தன் கால் சராய்ப் பையில் கையை விட்டு 20,000 யென் (சுமார் 400 ரூபாய்) எடுத்துக் கொடுத்துவிட்டார் எம்.ஜி.ஆர். அந்த நபர் போன பிறகு, ”என்ன ஸார் இது? அந்நியச் செலாவணி கிடைப்பது எவ்வளவு கஷ்டம்! நீங்கள்பாட்டுக்கு 400 ரூபாய் மதிப்புள்ள தொகையைத் தூக்கிக் கொடுத்துவிட்டீர்களே?” என்றேன் கொஞ்சம் பதற்றத்துடன்.

”என்ன செய்வேன்? ஒரு தமிழர் வந்து கஷ்டம் என்று கேட்கும்போது மறுக்க எனக்கு மனமில்லை” என்றார் எம்.ஜி.ஆர்.

அந்நியச் செலாவணி சுருக்கமான அயல் நாட்டிலும், கொடுத்துப் பழகிய அவருடைய கை சுருங்கவே இல்லை.

ஜப்பானிலிருந்து ஹாங்காங்குக்குப் புறப்படுகிற நாள்.

அன்று காலையில், பாங்க் ஆஃப் ஜப்பானில் உயர் அதிகாரியாக உள்ள சைகோ என்பவரைச் சந்திப்பதற்காக எம்.ஜி.ஆர். சென் றார். சைகோ, சிறுசேமிப்புத் துறைத் தலைவர். எம்.ஜி.ஆரும் அவரும் சிறுசேமிப்பு பற்றிக் கருத் துப் பரிமாறிக்கொண்டார்கள். அந்தச் சந்திப்பு முடிந்ததும் டோக்கியோவில் உள்ள இந்தியத் தூதரைப் பார்க்கச் சென்றார். அவரோடு பேசி முடித்துவிட்டுக் கிளம்பியபோது மணி 11.30. பிற்பகல் 2 மணிக்கு விமானம்.

இந்தியத் தூதுவரின் அந்தரங் கக் காரியதரிசியான ஜெயராம னின் வீட்டுக்குப் போனோம். அவர் மனைவி அப்போது ஊரில் இல்லாததால், அவரே சமைத்து ஃபிரிஜ்ஜில் வைத்திருந்த சாப்பாட்டை எடுத்துத் தந்தார். சாம் பார், ரசம், தயிர் போட்டுச் சாப்பிட்டார் எம்.ஜி.ஆர்.

அதன்பின், விமான நிலையம் கிளம்பினோம்.

ஜப்பானில் எம்.ஜி.ஆர் இருந்த பத்துப் பதினைந்து நாட்களும் அவர் ஒரு சுதந்திர மனிதராக நடமாடினார். தெருக்களில் காலாற நடந்தார். எலெக்ட்ரிக் ட்ரெயினில் நின்றுகொண்டு பிரயாணம் செய்தார். வெகு வருஷங்களுக்குப் பிறகு கிடைத்த சுதந்திரம்… பரிபூரணமான சுதந்திரம்..!

ஹாங்காங் வந்து சேர்ந்ததுமே எம்.ஜி.ஆரின் சுதந்திரம் பறிக்கப் பட்டுவிட்டது.

காரணம் – விமான நிலையத்தில் நிறைய தமிழர்களும், வேறு பல இந்தியர்களும் எம்.ஜி.ஆரை வரவேற்பதற்காக வந்து கூடியிருந் தார்கள். பலர் மாலை அணிவித் தார்கள். பலர் கட்டித் தழுவி முத்தமிட்டார்கள்.

ஜப்பான் எம்.ஜி.ஆர். ஹாங்காங் வந்ததும், தமிழ்நாட்டு எம்.ஜி.ஆர். ஆகிவிட்டார்.

”ஏதேது..! இங்கே படப்பிடிப்பே வைத்துக்கொள்ள முடியாது போலிருக்கே!” என்று எம்.ஜி.ஆரே சொல்லும் அளவுக்கு ஹாங்காங் விமான நிலையத்தில் ரசிகர்களின் அன்புத்தொல்லை ஆரம்பமாகி விட்டது.

அதைப் பார்த்தபோது என் மனத்தில் ஏற்பட்ட எண்ணம் இதுதான்…

எம்.ஜி.ஆர். இன்னும் ஓரிரு மாதங்கள் ஜப்பானில் இருந்திருந்தால், அங்கேயும் இப்படிப்பட்ட ரசிகர் கூட்டம் உருவாகிவிடும்!

காரணம் – அவருடைய ராசி அது!

Advertisements

6 Comments

 1. Happy newyear to all thalaivar fans. very good article sir.

 2. புதிய வானம் புதிய பூமி –
  நான் வருகையிலே என்னை வரவேற்க
  வண்ணப் பூமழை பொழிகிறது

  The above is the way Thalaivar is always welcomed wherever he goes ( till today). Happy New Year to all Rathathin Rathangal

 3. Really a good article,which most MGR fans do not aware. A worth, new year gift to all MGR fans. No wonder, he would become an important icon in Japan too had he stayed in Japan for another two/three months. Such a magnetic personality.

 4. I like this article. This is the article for showing MGR’s humanity. Wherever MGR goes all good souls are going along with him. He is not a man. He is humanitarian. wherever human beings are there. They definitely surrounds him. That is the nature.

 5. wonderful post, ippadi patta oru thalaivarai parapathu arithu.

 6. interesting to read


Comments RSS TrackBack Identifier URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 • Ads

 • G Ads